ஈரோடு மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் - மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ஈரோடு மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் - மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Nov 2020 1:54 PM IST (Updated: 17 Nov 2020 1:54 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து, ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் மஞ்சள் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் ஏற்றுமதிக்கு புத்துயிரூட்டி, விவசாயிகளின் கவலையை போக்க மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இலங்கை அரசின் மஞ்சள் இறக்குமதி தடையால் இலங்கை மக்களும், தமிழக விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த விஷயத்தில் மத்திய- மாநில அரசுகள் தலையிட்டு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, ஈரோடு மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story