நவம்பர் 20-ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் - தலைமை கழகம் அறிவிப்பு


நவம்பர் 20-ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் - தலைமை கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2020 10:40 PM IST (Updated: 17 Nov 2020 10:40 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நவம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை, 

மண்டலப் பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இந்த ஆலோசனை கூட்டம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Next Story