15 நாள் பயணமாக சென்னை வருகை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு முதல்-அமைச்சர் வரவேற்பு
15 நாள் பயணமாக தனி விமானம் மூலம் சென்னை வந்த துணை ஜனாதிபதியை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
ஆலந்தூர்,
தெலுங்கானா மாநிலம் பேகம்பேட்டில் இருந்து தனி விமானம் மூலம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து இறங்கினார். கொரோனா ஊரடங்கிற்கு பின் 9 மாதங்கள் கழித்து சென்னை வந்த துணை ஜனாதிபதியை விமான நிலையத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், தங்கமணி, பெஞ்சமின், கே.பி.அன்பழகன் மற்றும் முப்படை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், தமிழக போலீஸ் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அவர், பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் ஈஞ்சம்பாக்கம் சேஷாத்திரி அவென்யூவிற்கு புறப்பட்டு சென்றார்.
15 நாள் பயணம்
15 நாள் பயணமாக சென்னை வந்துள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். வருகிற 20-ந் தேதி காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்கிறார். 21-ந் தேதி கவர்னர் மாளிகையில் நடைபெறும் லால்பகதூர் சாஸ்திரி விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். 24-ந் தேதி சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் வதோராவிற்கு சென்றுவிட்டு 25-ந் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார். 15 நாள் பயணத்தை முடித்து கொண்டு வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
Related Tags :
Next Story