நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து ஆர்.கே.ராஜா திடீர் ராஜினாமா
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தொடங்கிய அ.இ.த.வி.ம.இ. கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை,
கடந்த சில நாட்களுக்கு முன்பாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற தனது கட்சியை பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதில் தன்னுடைய ரசிகர் யாரும் அதில் சேர வேண்டாம் என கூறப்பட்டு அறிக்கை வெளியானது.
இந்நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விஜய் ரசிகர் மன்ற தலைவர் பத்மநாபன் விலகுவதாகவும், கட்சியின் உறுப்பினராக தொடரப்போவதாகவும் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டு உள்ளார்.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தொடங்கிய அ.இ.த.வி.ம.இ. கட்சியின் மாநிலத் தலைவர் பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா ராஜினாமா செய்தது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பொருளாளர் பொறுப்பில் இருந்து விஜய்யின் தாய் ஷோப விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story