“மாணவர்களின் நலனுக்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது” - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காகவே 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் அதிமுக அரசின் நிலைப்பாடு. இருப்பினும் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை அறிந்து, அவர்களின் நலனுக்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்தவர்களில் 41 சதவீதம் பேர் அரசு பள்ளி மாணவர்கள் ஆவர். அதில் வெறும் 6 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தது. தற்போது வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் 313 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, “சசிகலாவின் விடுதலை அரசியலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், சசிகலாவின் விடுதலை அரசியலிலும், கட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story