மருத்துவ கலந்தாய்வில் போலி இருப்பிட சான்றிதழ் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவ கலந்தாய்வில் போலி இருப்பிட சான்றிதழ் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழக கிளை சார்பில் மருத்துவர் தினத்திற்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் வெளிப்படைத்தன்மையுடன் மருத்துவ கலந்தாய்வு நடைபெறுவதாக தெரிவித்தார்.
மேலும் மருத்துவ கலந்தாய்வில் போலி இருப்பிட சான்றிதழ் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
முன்னதாக பிற மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கும் தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்திருந்தார்.
Related Tags :
Next Story