சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு


சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு
x
தினத்தந்தி 1 Dec 2020 4:49 PM GMT (Updated: 2020-12-01T22:19:32+05:30)

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை,

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி 10 கூடுதல் நீதிபதிகளாக நக்கீரன் , சந்திரசேகரன், முரளிசங்கர், மஞ்சுளா ராமநாதன், தமிழ்செல்வி, கண்ணம்மாள்,சாந்திகுமார், ஆனந்தி சுப்பிரமணியம்,சிவஞானம் வீராசாமி , இளங்கோவன் கணேசன் ஆகியோர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது  சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. காலி பணியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. 

Next Story