அரசு எடுக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து ‘புரெவி’ புயலில் இருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்


அரசு எடுக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து ‘புரெவி’ புயலில் இருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 2 Dec 2020 1:26 AM IST (Updated: 2 Dec 2020 1:26 AM IST)
t-max-icont-min-icon

அரசு எடுக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து புரெவி புயலில் இருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை, 

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிவர் புயலின் போது அரசு எடுத்த முன்எச்சரிக்கையின் காரணமாக பெரும் அளவில் உயிரிழப்பும், பொருள் இழப்பும் தவிர்க்கப்பட்டது. அதே போல் தற்போது உருவாகி உள்ள ‘புரெவி’ புயலுக்காக அரசு எடுக்கும் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும், அறிவுரைகளையும், முழுமையாக கடைபிடிக்க வேண்டும். 

தென்மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் வருகிற 4-ந் தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆகவே மீனவர்கள், உங்களை நம்பியிருக்கும் குடும்பத்தினரின் பயத்தையும், அச்சத்தையும் போக்கும் வகையில் கடலுக்கு செல்லாமல் இருப்பது நன்மை பயக்கும். 

இயற்கையின் சீற்றத்தை சரியான முன்எச்சரிக்கை மற்றும் திட்டமிடலால் அவற்றை கடந்து செல்லும் சரியான பாதுகாப்பு நெறிமுறைகளை அரசு ஏற்படுத்தி மக்களுக்கு முன்எச்சரிக்கையாக அறிவித்துள்ளது. அதன்படி அனைவரும் தவறாமல் கடைபிடித்து, பல்வேறு இழப்பில் இருந்து நம்மை, நாம் காத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story