திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் கடந்த 7 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழநிலையில் திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாளை காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டெல்லியில் நடைபெறும் விவாசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாகவும், மாவட்ட அளவில் அதற்கான முகாந்திரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story