புரெவி புயல் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் மோடி ஆலோசனை


புரெவி புயல் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் மோடி ஆலோசனை
x
தினத்தந்தி 2 Dec 2020 7:17 PM IST (Updated: 2 Dec 2020 7:17 PM IST)
t-max-icont-min-icon

புரெவி புயல் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

சென்னை

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனிலிருந்து 420 கி.மீ., குமரியிலிருந்து 600 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வங்கக்கடலில் உருவான புரெவி புயலின் நகரும் வேகம்  15 கி.மீட்டராக குறைந்து உள்ளது  என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

புரெவி புயல் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

புரெவி புயல் குறித்து தமிழக முதல்வருடன் தொலைபேசி மூலம் உரையாடினேன். புரெவி சூறாவளி காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் நிலைமைகள் குறித்து விவாதித்தோம். மத்திய அரசு  தமிழகத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.



Next Story