“சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு” - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்


“சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு” - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 3 Dec 2020 5:08 PM IST (Updated: 3 Dec 2020 5:08 PM IST)
t-max-icont-min-icon

வருங்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஜனவரியில் கட்சியை துவங்க உள்ளதாகவும், டிசம்பர் 31-ல் அது பற்றிய அறிவிப்பு  வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்கள், அவரது இந்த அறிவிப்பால் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்தின் அறிவிப்பு குறித்து பேசினார். அப்போது அவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறிய அவர், வரும் காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

Next Story