குமரியில் 106 விசைப்படகுகள் கரை திரும்பவில்லை
குமரியில் 106 விசைப்படகுகள் கரை திரும்பவில்லை என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி,
மீனவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் உதயகுமார் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் இன்னும் 106 விசைப்படகுகள் கரை திரும்ப வேண்டியுள்ளது. அதில் 72 விசைப்படகுகளைச் சேர்ந்தவர்கள் கர்நாடகா, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநில ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்பான பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் உள்ள 32 விசைப்படகுகள் பாதுகாப்பாக அருகில் உள்ள துறைமுகப்பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். அனைவருக்கும் சேட்டிலைட் போன் மூலமாக கடந்த ஒரு வார காலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் 76 இடங்கள் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதற்காக மண்டல அளவிலான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்று படுகைகள், கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 75 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.
கரை திரும்பாத மீனவர்கள் யார் மீதும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. மீனவர்கள் மீது அரசுக்கு அதீத அக்கறை இருப்பதால் அவர்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்திருப்பார்கள். இந்தியாவிலேயே மீனவர்களுக்கு நவீன தகவல் தொழில்நுட்பம் கொண்ட சேட்டிலைட் போன்கள், நேவிகேசன் போன் கொடுப்பது தமிழகத்தில் மட்டும் தான்” என்றார்.
Related Tags :
Next Story