சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
சென்னை,
புரெவி புயல் காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
சென்னை எழும்பூர், கொரட்டூர், புரசைவாக்கம், அயனாவரம், ராயபுரம், கோடம்பாக்கம், தி.நகர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, திருவற்றியூர், கே.கே.நகர், தண்டையார்பேட்டை, சிந்தாரிப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர் பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பூந்தமல்லி, வானகரம், தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நங்கநல்லூர், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
நிவர் புயல் கரையைக் கடந்து ஒரு வாரம்கூட ஆகாத நிலையில், புரெவி புயல் காரணமாக சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story