தபால் வங்கி சேமிப்பு கணக்கு: குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் அபராதம் - தபால் துறை அறிவிப்பு
தபால் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தபால் துறை அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னை முதன்மை தபால் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தபால் வங்கி சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50 ஆக இருந்தது. இதை ரூ.500 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த விதிமுறை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை ரூ.500 ஆக உயர்த்திக்கொள்ள டிசம்பர் 11-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்புத்தொகையை ரூ.500 ஆக உயர்த்தாத பட்சத்தில் மார்ச் மாதம் முதல் அபராத கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.100, ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு இருப்புத்தொகை குறைக்கப்பட்டு கணக்கு காலாவதி ஆகிவிடும்.
எனவே, தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை ரூ.500 ஆக உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story