டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை


டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை
x
தினத்தந்தி 5 Dec 2020 8:53 AM IST (Updated: 5 Dec 2020 8:53 AM IST)
t-max-icont-min-icon

டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னை, 

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மிக தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி வங்க கடலில் உருவான நிவர் புயல் காரணமாக வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் ‘புரெவி’ என்ற புயல் உருவாகி தமிழக கடலோர பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.

வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயல் வலுவிழந்து, தற்போது தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டு இருந்தாலும் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. திருவாரூர், குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, ஆயக்காரன்புலம் ,மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லூர், மணல்மேடு, செம்பனார்கோவில், சீர்காழி பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கனமழை எதிரொலியாக காரைக்காலில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மீனம்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலையில் மிதமான மழை பெய்தது.

Next Story