வெள்ளத்தில் மிதக்கும் கடலூர்: நிவாரண முகாமில் அமைச்சர் சம்பத் ஆய்வு; 3 ஐஏஎஸ் அதிகாரிகள் வருகை


வெள்ளத்தில் மிதக்கும் கடலூர்: நிவாரண முகாமில் அமைச்சர் சம்பத் ஆய்வு; 3 ஐஏஎஸ் அதிகாரிகள் வருகை
x
தினத்தந்தி 5 Dec 2020 3:33 AM GMT (Updated: 5 Dec 2020 3:33 AM GMT)

வெள்ளத்தில் மிதக்கும் கடலூர், நிவாரண முகாமில் அமைச்சர் சம்பத் ஆய்வு நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. முக்கிய சாலைகளில் மழை  நீர் சூழ்ந்ததால்  போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. 

நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக பட்சமாக சிதம்பரத்தில் 34 செமீ மழை பதிவாகியுள்ளது.  கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பின. பெருமாள் ஏரியில் இருந்து உபரி நீர்   12 ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுவதால் அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. வீராணம் ஏரியில் இருந்து  வெள்ளியங்கால் ஓடையில் 4 ஆயிரம் கன அடியும், விஎன்எஸ் மதகு மூலம் 1500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.பரவனாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதாலும், என்எல்சி சுரங்கங்களில் இருந்து உபரி நீர்  வெளியேற்றப்படுவதால் குறிஞ்சிப்பாடி, கல்குணம், ஓணான்குப்பம், கொளக்குடி பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கன மழை, பரவனாற்றில் வெள்ளம், பெருமாள் ஏரி, வீராணம் ஏரி தண்ணீர் திறப்பு ஆகியவற்றின்  காரணமாக நூற்றிக்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான விளை நிலங்களில் தண்ணீரில் முழ்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.  

மழை தொடர்ந்த பெய்து வருவதால் கடலூர் மாவட்டமே வெள்ளத்தில் மிதக்கிறது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளனர். 

கடலூர், சிதம்பரம் உள்பட 11 இடங்களில் அதிகனமழையும், 23 இடங்களில் மிக கனமழையும், 42 இடங்களில் கனமழையும் கொட்டித் தீர்த்தது.

கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், பரங்கிப்பேட்டை, கிள்ளை, விருத்தாசலம், நெய்வேலி, மந்தாரக்குப்பம், குறிஞ்சிப்பாடி, வடலூர், திட்டக்குடி, பெண்ணாடம், ராமநத்தம், தொழுதூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக வெள்ளாறு, மணிமுக்தாறு, கெடிலம், தென்பெண்ணையாறு, பரவனாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் தொட்டப்படி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆறுகளையொட்டி உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 180 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பண்ருட்டி பகுதியில் பெய்த மழையால் விசூர் வெள்ளவாரி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது. உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டது.

அதிகனமழையை பொறுத்தவரையில் 21 செ.மீ.க்கு மேல் மழைப்பொழிவும், மிக கனமழைக்கு 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையிலான மழைப்பொழிவும், கனமழைக்கு 6 செ.மீ. முதல் 11 செ.மீ. வரையிலான மழைப்பொழிவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அந்தவகையில் நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 36 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், ‘கொள்ளிடம் (நாகப்பட்டினம்), சிதம்பரம் (கடலூர்), லால்பேட்டை (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), மணல்மேடு (நாகப்பட்டினம்), காட்டுமன்னார்கோவில் (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), சீர்காழி (நாகப்பட்டினம்), குடவாசல் (திருவாரூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்)’ ஆகிய 11 இடங்களில் அதிகனமழை (21 செ.மீ.க்கு மேல்) கொட்டியது.

  தருவதாக  மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி தகவல் தெரிவித்து உள்ளார்.

கடலூர் நிவாரண  முகாமில் அமைச்சர் சம்பத் ஆய்வு நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

Next Story