மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம்: டுவிட்டரில் அம்மா என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம்: டுவிட்டரில் அம்மா என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்
x
தினத்தந்தி 5 Dec 2020 4:01 AM GMT (Updated: 5 Dec 2020 4:01 AM GMT)

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி டுவிட்டரில் அம்மா என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

சென்னை

ஜெயலலிதாவின் 4-ம்ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி  ஜெயலலிதா தனது 68 வயதில் உயிரிழந்தார். இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இணையவாசிகள் அம்மா என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது, #அம்மா என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்தியளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் அம்மா என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது.


Next Story