நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து - சென்னையில் பரபரப்பு


நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து - சென்னையில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Dec 2020 9:47 AM IST (Updated: 7 Dec 2020 9:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்க அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

சென்னை,

சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர்கள் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story