சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது- கமல் ஹாசன் டுவிட்


சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது- கமல் ஹாசன் டுவிட்
x
தினத்தந்தி 7 Dec 2020 3:29 PM IST (Updated: 7 Dec 2020 3:29 PM IST)
t-max-icont-min-icon

அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது என்று கமல்ஹாசன் கடுமையாக சாடியுள்ளார்.

சென்னை,

சூரப்பா விவகாரத்தில் தன்னை சங்கி என விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறி, அவரை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.  

இந்த விவகாரத்தில் சூரப்பாவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு கமல்ஹாசன் மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. அதோடு, கமல்ஹாசனை சங்கி என்றும் அவர் பாஜகவின் பி டீம் என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன்,  'அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? 

தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story