துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்: அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு சம்மன்?


துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்:  அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு சம்மன்?
x
தினத்தந்தி 8 Dec 2020 5:29 AM IST (Updated: 8 Dec 2020 5:29 AM IST)
t-max-icont-min-icon

துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரணை மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான புகாரை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டார்.  இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பாக மேலும் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்கவும் தமிழக அரசு தரப்பில் மின்னஞ்சல் முகவரியும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதற்கான விசாரணை அலுவலகமாக சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அரசு பங்களாவான பொதிகை இல்லம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனுக்கு உதவியாக கூடுதல் அதிகாரிகள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகளும் தொடங்கியிருக்கின்றன.

நீதிபதி கலையரசன் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கருணாமூர்த்தி விசாரணை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை அலுவலகத்தில் ஆஜராவார் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளரை தொடர்ந்து, மேலும் சிலரையும் விசாரணை அலுவலகத்துக்கு நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story