சிறார் காப்பகங்களில் சமூக தணிக்கை - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறார் காப்பகங்களில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சமூக தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் ‘பச்பன் பச்சோ அந்தோலன்’ என்ற குழந்தைகள் நல அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள சிறார் காப்பகங்களை சமூக தணிக்கை செய்ய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்புக்கு உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிட அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள சிறார் காப்பகங்களில் சமூக தணிக்கை செய்ய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதிக்குள் இதற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story