எட்டு வழிச்சாலை அமைக்கப்படுமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்


எட்டு வழிச்சாலை அமைக்கப்படுமா? முதல்வர்  எடப்பாடி பழனிசாமி விளக்கம்
x
தினத்தந்தி 9 Dec 2020 9:49 AM GMT (Updated: 9 Dec 2020 9:49 AM GMT)

திருவாரூர் சென்ற முதலமைச்சர் பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திருவாரூர்,

முதல்வர் பழனிசாமி இன்று திருவாரூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது எட்டு வழிச்சாலை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது:- 
  • வெளிநாடுகளில் குறைந்தபட்சமே 8 வழிச்சாலைதான் உள்ளது. நாடு தொழில் வளர்ச்சிக்கு சாலை அவசியம்
  • 8 வழிச்சாலை நீண்ட கால திட்டம், இப்போது தொடங்கினால் கூட முடிய 6 ஆண்டுகளாகும்.
  • 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், நிலம் கையகப்படுத்தியது மட்டுமே மாநில அரசு.
  • விபத்து, கால விரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம்
  • திமுக ஆட்சியில் 17 நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் கொண்டு வந்த போது சுற்றுச்சூழல் பாதிக்கவில்லையா?
  • 3 வேளாண் சட்டங்களால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள்?
  • விருப்பப்பட்டால் மட்டுமே வேளாண் சட்டத்தை தமிழக  விவசாயிகள் பயன்படுத்தலாம்.
  • விளைபொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம்
  • பயனளிக்கும் என்பதால் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தமிழக அரசு வரவேற்கிறது
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story