ஜி.பி.எஸ். கருவி; போக்குவரத்து துறையின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

ஜி.பி.எஸ். கருவி; போக்குவரத்து துறையின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
x
தினத்தந்தி 9 Dec 2020 5:01 PM IST (Updated: 9 Dec 2020 5:01 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட 8 நிறுவனங்களின் ஜி.பி.எஸ். கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை,

போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட 8 நிறுவனங்களின் ஜி.பி.எஸ். கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

வாகனங்களுக்குத் தேவையான ஜி.பி.எஸ். உள்ளிட்ட கருவிகளை  குறிப்பிட்ட 8 நிறுவனங்களின் தயாரிப்புகளை  மட்டுமே வாங்கி  பொருத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால தடையை சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. மேலும், இது தொடர்பாக போக்குவரத்துத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story