சென்னையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
சென்னையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை,
பள்ளிகளுக்கு நீண்ட தூரம் செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன் படி இந்த ஆண்டும் இலவச மிதிவண்டிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 5.45 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story