அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு நாளை முதல் தொடக்கம் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு
அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட போது, பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அண்மையில் 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் அடுத்து வரும் பொங்கல் பண்டிகைக்கு பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story