சித்ராவின் மரணத்திற்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் - சித்ராவின் தாய் பேட்டி


சித்ராவின் மரணத்திற்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் - சித்ராவின் தாய் பேட்டி
x
தினத்தந்தி 10 Dec 2020 1:51 PM IST (Updated: 10 Dec 2020 1:59 PM IST)
t-max-icont-min-icon

தனது மகளை ஹேம்நாத் அடித்து கொலை செய்திருக்கலாம் என சித்ராவின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சென்னை

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விடுதியின் மேலாளர் உள்பட 3 பேரிடம் நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவரிடம் இரண்டாவது நாளாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சித்ராவின் தாயார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

சித்ராவின் மரணத்திற்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம். எனது மகளை ஹேம்நாத் அடித்து கொலை செய்திருக்கலாம் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை தைரியமானவர். ஹேம்நாத் நல்லவர் என ஏமாந்துவிட்டோம். மகளின் மரணத்திற்கு காரணமானவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . சித்ரா தாயாரின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story