தமிழக சட்டசபை தேர்தல்; வருகிற 13ந்தேதி முதல் கமல்ஹாசன் பிரசாரம்
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வருகிற 13ந்தேதி முதல் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
சென்னை,
தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தேர்தலில், வாக்காளர்களை கவர்ந்திழுக்க நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்கி விடுவது, எந்தெந்த அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, பிரசார வியூகங்களை வகுப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளன.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான போட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், வருகிற 13ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் கமல்ஹாசன் தொடர் பிரசார பயணம் மேற்கொள்கிறார். இதன்படி அவர், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
Related Tags :
Next Story