பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியமில்லை - அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியமில்லை - அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 10 Dec 2020 10:27 PM IST (Updated: 10 Dec 2020 10:27 PM IST)
t-max-icont-min-icon

இந்த மாதம் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா பரவலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் 16-ஆம் தேதியன்று 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஆனால், இந்த அறிவிப்புக்கு பொது மக்கள், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா். இதன் அடிப்படையில், அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்தக் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

அதேவேளையில் கடந்த வாரம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறையத் தொடங்கியதால் பள்ளிகளும் விரைவிலேயே திறக்கப்படலாம் என்கிற கருத்து பரவலாக நிலவி வருகிறது.

இந்தநிலையில் இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

இந்த மாதம் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியமில்லை. பள்ளிகளை திறப்பதற்கான முடிவை முதலமைச்சருடன் கலந்து பேசி அறிவிப்போம் என்றார்.

Next Story