மாநில செய்திகள்

அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம் + "||" + Booking for Pongal on government buses starts from today

அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்
பொங்கல் பண்டிகைக்கான அரசுப் பேருந்து முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட போது, பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அண்மையில் 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் அடுத்து வரும் பொங்கல் பண்டிகைக்கு பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி ஏதுவாக செல்லக்கூடிய நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கப்படுகிறது. 

வரும் ஜனவரிமாதம் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் மக்களின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று பொங்கல் பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து
பொங்கல் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2. விக்கிரமசிங்கபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாரான கரும்புகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விக்கிரமசிங்கபுரத்தில் பயிரிடப்பட்டு உள்ள கரும்புகள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.