நடிகர் ரஜினிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்த‌நாள் வாழ்த்து


நடிகர் ரஜினிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்த‌நாள் வாழ்த்து
x
தினத்தந்தி 11 Dec 2020 10:16 PM IST (Updated: 11 Dec 2020 10:16 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த் நாளை 70-வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்ந்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

புதிதாக தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ரஜினிகாந்த் நியமித்தார். தற்போது தனது புதிய கட்சியை பதிவு செய்வது தொடர்பாக வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் ஆகியோருடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்றும் போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் 71–வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் அவரது பிறந்தநாள் வருவது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. இதன் காரணமாக ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் கோ பூஜை, கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை 70ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்ந்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story