தமிழக அரசு பள்ளிகளில் அரையாண்டு தோ்வுகள் ஒத்திவைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழக அரசு அரையாண்டு தோ்வுகளை ஒத்திவைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகள் தற்போது திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக அரசு அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியாா் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தலாம் என்றும் ஆன்லைன் தேர்வு பற்றி அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story