தமிழகத்தில் போலீஸ் பணிக்கு இன்று எழுத்து தேர்வு


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 13 Dec 2020 2:33 AM IST (Updated: 13 Dec 2020 2:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் போலீஸ் பணிக்கு இன்று எழுத்து தேர்வு 499 மையங்களில் நடக்கிறது.

சென்னை,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த ஆண்டு மாவட்ட, மாநகர ஆயுதப்படை பிரிவில் 685 (ஆண்கள்), 3 ஆயிரத்து 99(பெண்கள், திருநங்கையர்), சிறப்பு காவல்படை பிரிவில் 6 ஆயிரத்து 545, சிறைத்துறைக்கு 119 (ஆண்கள்-112, பெண்கள்-7), தீயணைப்புத்துறைக்கு 458 (ஆண்கள்) என 10 ஆயிரத்து 906 இரண்டாம் நிலை போலீசார் தேர்வு செய்யப்படுவதற்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் 499 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 35 மையங்களில் 29 ஆயிரத்து 981 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நேரம் காலை 11 மணி முதல் மதியம் 12.20 மணிவரை ஆகும். தேர்வு கண்காணிப்பு பணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீ சார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

கொரோனா காலம் என்பதால் தேர்வர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், இல்லையென்றால் தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை என்றும் சீருடை பணியாளர் தேர்வாணையம் உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு 6 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5 லட்சத்து 50 ஆயிரத்து 314 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story