தமிழகத்தில் 16, 17-ந் தேதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 16, 17-ந் தேதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 14 Dec 2020 12:41 AM IST (Updated: 14 Dec 2020 12:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 16, 17-ந் தேதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்த மாதம் இறுதிவரை வடகிழக்கு பருவமழை தொடரும். எனவே இம்மாதம் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வந்தாலும், வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக 16-ந்தேதிக்கு பிறகு கனமழை பெய்யும். 

அதன்படி வருகிற 16, 17-ந்தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Next Story