மாணவர்களுக்கு கொரோனா தொற்று - சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு + "||" + Corona infection for students - Order to close all departments at IIT Chennai
மாணவர்களுக்கு கொரோனா தொற்று - சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு
மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் அதிகரித்து வந்தது. அதையடுத்து தமிழக அரசு, மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில் சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது.
மேலும் சென்னை ஐஐடியில் படித்துவரும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்-லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து துறைகளும் செயல்பட கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது