"கொரோனா தொற்றை வேகமாக கட்டுப்படுத்தியது தமிழக அரசு" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
தமிழக அரசு கொரோனா தொற்றை வேகமாக கட்டுப்படுத்தியது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை ராயபுரத்தில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியாதாவது:-
மற்ற நாடுகளுடன் ஒப்பீடும் போது, கொடிய கொரோனா தொற்றை வேகமாக கட்டுபடுத்தியது தமிழக அரசு. தமிழக அரசின்
கொரோனா தடுப்பு செயல்பாடுகளை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார்.
ஊரடங்கு மற்றும் தளர்வுகளை சரியாக கையாண்டு நோய்தொற்றை தமிழக அரசு குறைத்துள்ளது. இந்தியாவிலேயே அதிக பட்சமாக நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Related Tags :
Next Story