அதிமுகவுடன்தான் கூட்டணி தொடர்கிறது - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்


அதிமுகவுடன்தான் கூட்டணி தொடர்கிறது - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
x
தினத்தந்தி 14 Dec 2020 4:30 PM IST (Updated: 14 Dec 2020 4:30 PM IST)
t-max-icont-min-icon

அதிமுகவுடன்தான் கூட்டணி தொடர்கிறது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “அதிமுகவுடனான எங்கள் கூட்டணி தொடர்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும். வேளாண் சட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. திமுக தூண்டுதலின்பேரில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதால் ஆன்மிகம், விவேகானந்தர் என்றெல்லாம் பேசுகிறார். கடவுள் இல்லை என்று இனியும் சொன்னால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது” என்று எல்.முருகன் கூறினார். 

Next Story