ஆன்மிக அரசியல் எடுபடுமா? தந்தி டி.வி.யில் கமல்ஹாசன் சிறப்பு பேட்டி இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது
மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை,
மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள கமல்ஹாசனின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் மேலும் பல பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
ஆன்மிக அரசியல் தமிழகத்தில் எடுபடுமா? ரஜினி வருகை கமலுக்கு சவாலா? ரஜினியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்தும், இன்னொருபக்கம் பா.ஜ.க.வுடன் தேர்தல் உறவுக்கு சாத்தியம் உள்ளதா? போன்ற கேள்விகளுக்கும் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். பற்றியும் அந்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் கமல்ஹாசன். எம்.ஜி.ஆரின் நீட்சி என்று சொல்ல தனக்கு முழு தகுதியும் உண்டு என்றும், காரணம் எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவன் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தற்போதைய அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் எம்.ஜி.ஆரை பார்த்திருக்க கூட மாட்டார்கள் என்றும் விமர்சனம் செய்துள்ளார். கமல்ஹாசனின் மேலும் பல கருத்துகள் இன்று இரவு தந்தி டி.வி.யில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
Related Tags :
Next Story