அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 பேருக்கு அறிகுறி?


அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 பேருக்கு அறிகுறி?
x
தினத்தந்தி 15 Dec 2020 2:37 AM IST (Updated: 15 Dec 2020 3:00 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா நோய்த் தொற்று பரவலை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 பேருக்கு அறிகுறி இருந்ததாகவும், அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, 

சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா நோய்த் தொற்று பரவலை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 பேருக்கு அறிகுறி இருந்ததாகவும், அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களில் சிலருக்கும், பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். தற்போது அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியான கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் விடுதியில் 2 பேருக்கு காய்ச்சல் இருந்ததாக நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த 2 மாணவர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றும், அந்த பரிசோதனை முடிவு வந்த பிறகே அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா? என்பது தெரியவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து விடுதியில் இருந்த மாணவர்கள் அனைவரும் தனித்தனி அறையில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், 2 மாணவர்களுக்கு நோய்த் தொற்று உறுதியாகும் பட்சத்தில் விடுதியில் இருக்கும் பிற மாணவர்களுக்கும் கொ ரோனா பரிசோதனை மேற்கொள்ள கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உயர்கல்வி நிறுவனங்களில் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவல் குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story