டிசம்பர் 15: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,01,161 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,79,291 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,210 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 11,919 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 359 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தம் 2,20,560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1,30,86,807 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 66,213 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,27,89,482 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 65,810 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 9,951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 4,84,110 பேர் ஆண்கள், 3,17,017 பேர் பெண்கள்.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை விவரம்:-




Related Tags :
Next Story