ஜனவரி 4-ம் தேதி பள்ளிகள் திறப்பு: புதுச்சேரி மந்திரி கமலக்கண்ணன் பேட்டி
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ஜனவரி 4-ம் தேதி தொடங்கப்படும் என்று அம்மாநில மந்திரி கமலக்கண்ணன் கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மந்திரி கமலக்கண்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
புதுச்சேரியில் ஜனவரி 18 முதல் முழுமையாக பள்ளிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ஜனவரி 4-ம் தேதி தொடங்கப்படும். ஏற்கனவே 9,10,11,12-ம் வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜனவரி 4-ம் தேதி தொடங்கப்படும் வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
அரைநாள் மட்டும் செயல்படும் பள்ளிகளுக்கு விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வந்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். புதுச்சேரியில் கல்லூரிகளை திறப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story