பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் - முதலமைச்சர் பழனிசாமி
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்டம் வாணியம்பாடியில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் வீரபாண்டி அருகே அம்மா மினி கிளினிக் திட்டத்தை திறந்துவைத்த பின் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளது. அதிமுக அரசு நேரடியாக மக்களோடு பேசி வருகிறது. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது. 2 பேருக்கும் மக்கள் தான் வாரிசு. மக்களை சந்திப்பது பெரிதா? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து பேசுவது பெரிதா? என்றார்.
Related Tags :
Next Story