அதிமுகவினர் யாருக்கும் கமல்ஹாசன் டிவி நிகழ்ச்சியை பார்க்க நேரமில்லை - கமல்ஹாசனுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்


அதிமுகவினர் யாருக்கும் கமல்ஹாசன் டிவி நிகழ்ச்சியை பார்க்க நேரமில்லை - கமல்ஹாசனுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்
x
தினத்தந்தி 18 Dec 2020 12:51 PM IST (Updated: 18 Dec 2020 3:09 PM IST)
t-max-icont-min-icon

கமல்ஹாசன் டிவி நிகழ்ச்சியை முதலமைச்சரும், அமைச்சர்களும் பார்ப்பதில்லை என கமல்ஹாசனுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.

மதுரை

அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

கமல்ஹாசன் டிவி  நிகழ்ச்சியை முதலமைச்சரும், அமைச்சர்களும் பார்ப்பதில்லை. எங்கள் யாருக்கும் பிக்பாஸ் பார்க்க நேரமில்லை. அமைச்சர் பதவி என்பது முள் படுக்கையில் அமர்வது போன்றது. அமைச்சர்கள் மலர் படுக்கையில் அமரவில்லை என்றார்.

Next Story