முதலமைச்சராக இல்லாமல் மக்கள் சேவகனாக பணியாற்றி வருகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
முதலமைச்சர் என்ற நினைப்பு எனக்கு இல்லை என்றும் மக்கள் சேவகனாக பணியாற்றி வருகிறேன் என்று பழனிசாமி கூறினார்.
சேலம்,
சேலம் முத்துநாயக்கன்பட்டியில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
நான் முதலமைச்சராக இல்லாமல் மக்கள் சேவகனாக பணியாற்றி வருகிறேன். முதலமைச்சர் என்ற நினைப்பு எனக்கு எப்போதும் இருந்ததில்லை. மக்களுக்கான சேவையே முக்கியம்.
கிராமத்தில் பிறந்து நான் பட்ட கஷ்டத்தை இன்று யாரும் படவிடமாட்டேன். கஷ்டத்தை உணர்ந்தவர்களுக்கு தான் திட்டத்தின் நன்மை தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story