நாளை முதல் 2ம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் 3 நாட்களில் 6 மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
‘சீரமைப்பும் தமிழகத்தை’ என்கின்ற மிக உன்னதமான நோக்கத்துடன் வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்கின்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வருகின்ற டிசம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், மற்றும் விழுப்புரம் மண்டலங்களில் பிரச்சாரத்தை நிகழ்த்த வருகிறார்.
செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கட்டமைப்பு மாவட்ட செயலாளர், அப்பகுதியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பொறுப்பேற்று செய்யவேண்டும். கட்டமைப்பு உறுப்பினர்களும், சார்பு அணி உறுப்பினர்களும் இணைந்து செயல்பட்டு இந்தப் பிரச்சாரம் நிகழ்வினை சீரும் சிறப்புடன் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story