மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் பிறந்தநாள் : மு.க.ஸ்டாலின் மரியாதை


மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் பிறந்தநாள் : மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 19 Dec 2020 12:32 PM IST (Updated: 19 Dec 2020 12:32 PM IST)
t-max-icont-min-icon

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அன்பழகனின் பிறந்தநாளையொட்டி சென்னை அயனாவரம் இல்லத்தில் உள்ள க. அன்பழகனின் படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அவர்களுடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பதிவில்,

பேராசிரியர் அவர்கள் பிறந்த தினம் இன்று. தலைவர் கலைஞர் அவர்களது உற்ற தோழராக, தனது கொள்கைகளிலிருந்து என்றும் வழுவாமல் இறுதிவரை கழகமே மூச்சாக வாழ்ந்தவர் என்று பதிவிட்டுள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், கொண்ட கொள்கை- ஏற்றுக்கொண்ட தலைமை-இயக்கத்தில் உறுதியென இறுதி மூச்சு வரை இயங்கிய நம் இனமானப் பேராசிரியரின் 98-வது பிறந்த நாளில் அவரின் அரும்பணிகளை போற்றுவோம். இயக்கம் மக்களுக்காக பேசியது- இயக்கத்துக்காக பேசியவர் பேராசிரியர். அவர் வழியில் பயணித்து கழகத்தின் வெற்றியை உறுதி செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

Next Story