சென்னை மகளிர் போலீஸ் நிலைய செயல்பாட்டில் மாற்றம் - குற்றப்பிரிவு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பு
சென்னை மகளிர் போலீஸ் நிலைய செயல்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டு குற்றப்பிரிவு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங்கள் அந்தந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட துணை கமிஷனர்கள் கட்டுப்பாட் டில் செயல்பட்டு வந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தொடங்கிய பின்னர், அதன் துணை கமிஷனர் ஜெயலட்சுமி கட்டுப்பாட்டில் அனைத்து மகளிர் போலீஸ்நிலையங்களும் கொண்டு வரப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் அந்தந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட துணை கமிஷனர்கள் கட்டுப்பாட்டில் மகளிர் போலீஸ் நிலையங்கள் செயல்பட வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story