மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 2-ம் கட்ட பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்


மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 2-ம் கட்ட பிரசாரத்தை இன்று  தொடங்குகிறார்
x
தினத்தந்தி 20 Dec 2020 9:12 AM IST (Updated: 20 Dec 2020 9:12 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 2-ம் கட்ட பிரசாரத்தை இன்று சென்னையில் தொடங்குகிறார்.

சென்னை, 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 13-ந்தேதி மதுரையில் தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறார். அதன்படி இன்று மாலை 4 மணிக்கு தனது கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்னை ஆலந்தூர், போரூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதைத்தொடர்ந்து காஞ்சீபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டு அங்கேயே தங்குகிறார்.

பின்னர் 2-வது நாள் பிரசாரமாக நாளை (திங்கட்கிழமை) சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு செல்கிறார். அதைத்தொடர்ந்து பிள்ளையார் பாளையம், கீழம்பி, செய்யாறு, செஞ்சி, கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். 3-வது நாளாக 22-ந் தேதி செவ்வாய்க்கிழமை நெல்லிக்குப்பம், திருச்சிற்றம்பலம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு சென்னையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். மேற்கண்ட தகவல் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story