சென்னையில் இன்று மாலை அதிமுக ஆலோசனை கூட்டம்


சென்னையில் இன்று மாலை அதிமுக ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2020 9:39 AM IST (Updated: 20 Dec 2020 9:39 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து சென்னையில் இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே அரசியல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. நேற்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டசபை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

இந்நிலையில்,  அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து சென்னையில் இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story