காசிமேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகில் தீ விபத்து


காசிமேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகில் தீ விபத்து
x
தினத்தந்தி 21 Dec 2020 10:29 AM IST (Updated: 21 Dec 2020 10:29 AM IST)
t-max-icont-min-icon

காசிமேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை,

கடந்த மாதத்தில் தொடர்ந்து வீசிய இரண்டு புயல்களால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்தநிலையில் காசிமேடு மீனவர்கள் கடந்த சில வாரங்களாக கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மீனவர்கள் கடலுக்குள் செல்லும் முன்னர் படகிற்கு பூஜை செய்து வழிபட்டு பின்னர் புறப்படுவது வழக்கம். 

வழக்கம்பொல காசிமேடு துறைமுகப்பகுதியில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல இருந்த விசைப்படகு ஒன்றில் பூஜை செய்யப்பட்டுள்ளது. கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்த போது கற்பூரம் படகில் விழுந்து தீப்பற்றியது. 

தீயை அணைக்க பலர் முயன்றும் மளமளவென பரவிய தீ படகு முழுவதையும் பற்றிக் கொண்டது. துறைமுக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தும் படகு முழுவதும் எரிந்து சேதமானது.

Next Story