அமேசான் இந்தியா நிறுவனத்தின் நவீன வசதி - ‘ஆர்டர்' செய்த 2 நாட்களுக்குள் பொருட்களை பெறலாம்


அமேசான் இந்தியா நிறுவனத்தின் நவீன வசதி - ‘ஆர்டர் செய்த 2 நாட்களுக்குள் பொருட்களை பெறலாம்
x
தினத்தந்தி 2 Oct 2021 9:14 PM GMT (Updated: 2 Oct 2021 9:14 PM GMT)

பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேகமான, வசதியான சேவைகளை வழங்க அமேசான் இந்தியா நிறுவனம் நவீன வசதியை செய்துள்ளது. இதனால் பொருட்களை ‘ஆர்டர்' செய்த 2 நாட்களில் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

சென்னை, 

‘அமேசான் இந்தியா கிரேட் இந்தியன்' திருவிழா, அதாவது பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு வேகமான மற்றும் சிறந்த ‘ஷாப்பிங்' அனுபவத்தை வழங்க அமேசான் இந்தியா தனது முதலீட்டு வலையமைப்பை கணிசமாக விரிவுப்படுத்தியுள்ளது. அந்தவகையில், கடந்த சில மாதங்களாக இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் மையங்கள் (புல்பில்மெண்ட் சென்டர்), வினியோக நிலையங்கள் மற்றும் புதிய மையங்களில் உள்கட்டமைப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.

அதாவது இந்தியாவில் 14 நகரங்களில் 35-க்கும் மேற்பட்ட சிறப்பு மையங்களுடன் கடந்த ஆண்டை விட அதன் செயலாக்க திறனை இரட்டிப்பாக்கியுள்ளது. மேலும் அதன் செயல்பாட்டு ‘நெட்வொர்க்’கில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பருவகால வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்திருப்பதால், நிறுவனத்தின் நிறைவு மற்றும் வினியோக திறன்களை வலுப்படுத்த புதிய பருவகால வேலைவாய்ப்புகள் உதவும்.

கோவை உள்பட பல்வேறு நகரங்களில் புதிய பிரத்யேக நிவர்த்தி செய்யும் மையங்கள் மற்றும் விரிவாக்கம் இதில் அடங்கும். 80 சதவீதத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள், 97 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்த 2 நாட்களுக்குள் பொருட்களை பெறமுடியும். www.amazon.in இணையதளத்தில் ‘ஷாப்பிங்' செய்யும்போது வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டரின் ‘செக் அவுட்' பக்கத்தில், அருகாமையில் உள்ள இடங்களை ‘பிக்-அப்' இடமாக தேர்ந்தெடுக்கலாம்.

www.amazon.in மற்றும் அமேசான் மொபைல் 'ஷாப்பிங்' செயலியில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் 20 கோடிக்கு அதிகமான தயாரிப்புகளை எளிதாக மற்றும் வசதியாக அணுகலாம். பாதுகாப்பான ஆர்டர் அனுபவம், வசதியான டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ‘கேஷ் ஆன் டெலிவரி', 24 மணி நேரமும் செயல்படும் வாடிக்கையாளர் சேவை மற்றும் விரிவான 100 சதவீதம் கொள்முதல் பாதுகாப்பு ஆகியவற்றில் இருந்து வாடிக்கையாளர்கள் பயன் அடைவார்கள்.

இதுகுறித்து அமேசான் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் (வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்தல்) அகில் சக்சேனா கூறுகையில், “எங்களுடைய ‘புல்பில்மெண்ட்' மற்றும் வினியோக ‘நெட்வொர்க்’ ஆகியவற்றின் உள்கட்டமைப்பில், நாங்கள் செய்யும் தொடர்ச்சியான முதலீடு வாடிக்கையாளர்களுக்கு தேவையானவற்றை சிறப்பாக தருவதற்கு உதவும். மேலும் பண்டிகை காலத்திலும் அதற்கு அப்பாலும் தடையற்ற, வேகமான மற்றும் நம்பகமான அனுபவத்துடன் பாதுகாப்பாக வாடிக்கையாளர்களின் பொருட்களை கொண்டு சேர்க்கும்” என்றார்.

மேற்கண்ட தகவல் அமேசான் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story